டச்சு நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஃப்ராங்க் ஹூகெர்பீட்ஸ் (frank hoogerbeets) துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட போவதை 3 நாட்களுக்கு முன்பே கணித்து கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
துருக்கியில் நேற்று மட்டும் 3-முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. அதே போல் சிரியாவில், இரண்டுமுறை நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால், பல கட்டடங்கள் தரைமட்டமாகியதோடு, ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில் பலியானோர் எண்னிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
அந்த அச்சம் அடங்குவதற்குள் 2-வது நாளாக துருக்கியில், இன்று காலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 5.6 ரிக்டராக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான நிலையில், டச்சு நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஃப்ராங்க் ஹூகெர்பீட்ஸ் (frank hoogerbeets) துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட போவதை 3 நாட்களுக்கு முன்பே கணித்து அதனை தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டிருந்ததாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.