விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் இறந்து விட்டார் இறக்கவில்லை என காலத்துக்கு காலம் பலர் கதைகளை பேசி வருகின்றனர்.
ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) இருந்த காலத்தில் போர் இடம்பெற்றவேளை பிரபாகரன் சரணடைந்ததாகவும், அவர் கொல்லப்பட்டதாகவும் அவரை கடலில் எறிந்தாகவும் சொல்லியிருந்தனர்.
அதிலேயே பல குழப்பங்கள் உள்ளன. பிரபாகாரனின் மரணச் சான்றிதழ் இல்லை, மரண விசாரணை நடத்தப்படவும் இல்லை. டி.என்.எ. பரிசோதனை செய்யப்படவும் இல்லை. பிரபாகரன் கை துப்பாக்கியுடன் சரணடைந்தாக சொல்கின்றனர்.
சரணடையும் யாரும் துப்பாக்கியுடன் சரணடைவார்களா. அதையும் விடுவோம். உங்களிடம் சரணடைந்தார் என்று தானே சொல்லிறீர்கள். அப்போது ஏன் அவரை அடையாளம் காண்பதற்கு கருணா அம்மானையும், தயா மாஸ்டரையும் அழைத்தீர்கள்.
ஆகவே இதில் குழப்பம் உள்ளது.அது ஒரு புறம் இருக்கட்டும். காலத்துக்கு காலம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) ஆக இருந்தாலும் சரி, சரத் பொன்சேகாவும் (Sarath Fonseka) இருந்தாலும் சரி, பிரபாகரனின் கதையை இழுக்காமல் இருக்க மாட்டார்கள்.
நான் நினைக்கின்றேன் டக்ளஸுன் கனவில் பிரபாகரன் தினமும் செல்கிறார் போல. இல்லை புலிகளின் ஆவிகள் இவரிடம் செல்கிறது என நினைக்கின்றேன். அவரை திருத்த முடியாது.
அவருக்கு கதைக்க பேசத் தெரியாது. பன்றியை எங்கே கொண்டு போய் விட்டாலும் அது தன்னுடைய குணத்தை தான் காட்டும். ஈ.பி.டி.பி ஐ பற்றி நாம் சொல்ல தேவையில்லை. மக்களுக்கு இவர்களை பற்றி தெரியும். புலிகளின் தலைவர் பிரபாகரன் சரணடைந்தார் என்றால். உங்கள் போர் தர்மம் சரணடைந்தவர்களை கொலை செய்வதா என ம. க. சிவாஜிலிங்கம் கேட்டுள்ளார்.