பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு அழைப்பு விடுத்தமை தொடர்பில் பாரம்பரிய முஸ்லிம்களுக்கும் வஹாபி முஸ்லிம்களுக்கும் இடையில் மோதல் ஒன்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த மோதல் சம்பவம் கடந்த 4ஆம் திகதி நிக்கவெரட்டிய தும்மல சூரிய பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில் மோதலுடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்களை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
நாட்டின் தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தத் தேவஸ் தானத்தில் வண.கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் சுதந்திர தின நிகழ்வு இடம்பெற்றது. அந்த நிகழ்வு முடிந்ததும் இரு குழுக்களிடையே மோதல் ஏற்பட்டதில் காயமடைந்த ஒருவர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.