ஜேர்மனி Tuttlingen ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் ரசிக்குமார் ரதுஷன் 2ம் இரண்டு நினைவஞ்சலி.இரண்டு ஆண்டு ஆனாலும்
உள்ளம் எல்லாம் தேம்புதையா
மனதிலே நினைவுகள் மறக்காமல்
தந்துவிட்டு மாயமாய் மறைந்து சென்றாயோ! பூத்த நினைவானது வாடும் முன்னே
பூமியை விட்டு போன மகனே!
நேசம் மறக்கவில்லை நினைவுகள் கலையவில்லை
எம் அழியாச் சொத்து அலை மோதிப் போனதனால்
விழி மூட மறுக்குது மகனே
உன் இமை மூடிப் போனதினால்
மனம் ஏங்கி தவிக்கின்றது
உன் குரல் கேட்க துடிக்கிறது உன் நினைவுகள் எங்களைத் தாலாட்ட
மீண்டும் மீண்டும் தேடுகிறோம் ஏங்கி
ஏங்கித் தவிக்கின்றோம்
உன் அன்பு முகம் மறைந்தாலும்
அழியாத நினைவு அலைகள்
கண்முன்னே இருக்கின்றன
ஆண்டுகள் எத்தனை ஆனாலும்
அகலாது உன் பிரிவு
மறக்க முடியுமா எம்மையெல்லாம
ஆழாத்துயரியில் ஆழ்த்திவிட்டு
மீளாத்துயில் சென்றாயோ?
என் அன்பு மகனின் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.. உன் பிரிவால் வாடும் அன்பான அப்பா, அம்மா, பாசமுள்ள தம்பி… ஈராண்டு சென்றது மகனே
ஈன்றெடுத்தவளும் கலங்கிப் போனாளே
அன்புடையான் பண்புடையான்
அளவில்லா பணிவுடையான எள்ளளவும் கள்ளமிலா
உள்ளத்தால் உயர்வுடையான் உனது எண்ணம்
உனது பார்வை
உனது உருவம்
எம்மால் மறக்க முடியாது
தென்றலாகி உன்னைத் தேட
கார்முகிலில் மறைவது
ஏனோ
19 வருட கால
நினைவலைகளை சுமந்து
நிர்க்கதியாய் நிற்கின்றோம்.
உன் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றோம். பெரியப்பா மார் பெரியம்மார் மாமா மாமி சித்தப்பா சித்தி தம்பி தங்கைவார்த்தை தடுமாறுகின்றதே
நேற்றுக்கண்ட உனை நினைத்து
நெஞ்சம் உருமாறுகின்றதே!!
காந்தமாய் எமையீர்த்த உனை
காலனுனை கவர்ந்து சென்றதேனோ?
காலமெல்லாம் உம் உறவு
நினைத்துருக காததூரம் எமைவிட்டு
சென்றதேனோ? நாமோ!! இன்று
மங்காத உன் நினைவால்
மயங்கியே நிற்கின்றோம் கலையாத நினைவுகளுடன்
உதிரும் கண்ணீர்
பூக்களால் அர்ச்சித்து உன்
ஆத்மா சாந்தியடைய
எங்கள் கண்ணீர்த்துளிகளைக்
காணிக்கையாக்குகிறோம். உன் நினைவில்
சின்ன அப்பம்மா,மாமாமார், மாமிமார்,
மைத்துனர்கள், மைத்துனிகள்அன்னாரின் இரண்டாவது ஆண்டு திவசம் 29-12-2021 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும். முகவரி:
கலட்டி அம்மன் வீதி,
யாழ்ப்பாணம்,
இலங்கை.
தகவல்: குடும்பத்தினர்