இலங்கை கிரிக்கெட்டை மீண்டும் சிறந்த இடத்துக்கு கொண்டு வர, இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் லசித் மலிங்க ஆகியோர் பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யாவுக்கு தங்கள் நுண்ணறிவுகளை வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஊடகம் ஒன்று இது தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளது.
இலங்கையின் ஆண்கள் கிரிக்கெட் அணியின் முழுநேர தலைமை பயிற்சியாளராக சனத் ஜெயசூர்ய பொறுப்பேற்று இரண்டு மாதங்களே ஆகின்றன.
அதற்குள் அவரது வழிகாட்டுதலின் கீழ் அணி நோக்கத்தை நோக்கி செல்வதை அவதானிக்க முடிகிறது.
ஜெயசூர்யவின் தலைமையின் கீழ், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் வெற்றி, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் மற்றும் 20க்கு20 போட்டிகளில் தொடர் வெற்றி, இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் வெற்றி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் வெற்றி, அதைத் தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் வெற்றி மற்றும் 20க்கு 20 போட்டிகளில் 1-1 சமநிலை போன்ற முன்னேற்றங்களை இலங்கை அணி பெற்றுள்ளது.
இந்த வெற்றிகளுக்கு பின்னால் சங்கக்கார மற்றும் மலிங்கவின் உதவி இருப்பதாக இந்திய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில் இலங்கை அணி தற்போது நியூஸிலாந்துக்கு சர்வதேச ஒருநாள் போட்டித்தொடருக்காக சென்றுள்ளது.