இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தலவத்துகொட அக்குரேகொடவில் அமைந்துள்ள சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் இல்லத்திற்குச் சென்றுள்ளார்.
அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரவு விருந்தில் அமெரிக்கத் தூதரகத்தின் இரண்டாவது பிரதிநிதியும் இணைந்துள்ளார்.
இந்நிகழ்வில் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த, முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, அமைச்சரின் கணவர் கலாநிதி சேனக டி சில்வா ஆகியோரும் கலந்துகொண்டனர்.
பொருளாதார நெருக்கடி
இதன்போது , நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் நாட்டில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க பல யோசனைகளையும் ஆலோசனைகளையும் முன்வைத்துள்ளார். மேலும் இந்நிகழ்ச்சியில் அமைச்சரின் தனிப் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.