நாட்டில் ஏற்பட்டுள்ள நெருகடி நிலையை அடுத்து அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி மக்கள் போராடங்களை முன்னெடுத்திருந்தனர்.
எனினும் மக்களின் குரல்களுக்கு செவிசாய்க்காத கோட்டாபய பதவி விலகாது இருந்து வந்த நிலையில் கடந்த 9 ஆம் திகள் போராட்டத்தில் ஈடுஇபட்டவர்கள் ஜனாதிபதி செயலகம் மற்றும் ஜனாபதி மாளிகையை முற்றுகையிட்டு அவற்றினை தம் வசப்படுத்தியிருந்தனர்.
அதேசமயம் போராட்டகாரகள் அங்கு செல்வதற்கு முன்னரே ஜனாதிபதி கோட்டாபய அங்கிருந்து தப்பி திருகோணமலையில் படைத்தளத்தில் பதுங்கியுள்ளதாக கூறப்படுகின்றபோதும், இதுவரை அவர் எங்கிருக்கின்றார் என உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில் ஜனாதிபதி மாளிகை குடியிருப்பாளர்களாக போராட்டகாரர்கள் மாறியுள்ள நிலையில் அங்குள்ள இளைஞர்கள் ஜனாதிபதி மாளிகையில் குப்பைகளை அகற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.