காலி முகத்திடலை அண்மித்த கடலில் பெண் ஒருவர் கடலில் குதித்து உயிரை மாய்க முனைந்த நிலையில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் காப்பாற்றியுள்ளனர்.
கொழும்பு காலி முகத்திடலில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் காலை உடல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காலி முகத்திடலில் கொடிக்கம்பத்திற்கு அருகில் நின்றிருந்த பெண் ஒருவர் திடீரென கடலில் குதித்துள்ளார்.
பொலிஸ் ஆய்வாளர் ஏ.எச்.பி.எஸ். அத்தியட்சகர் உள்ளிட்ட குழுவினர் குறித்த பெண்ணை பத்திரமாக மீட்டதுடன் பெண்ணை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.