ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாணத்திற்கான நேற்றைய விஜயத்தின்போது அவரது பாதுகாப்பு வாகனம் ஒன்று கடும் புகையினை வெளியேற்றியவாறு சென்றதாக கூறப்படுகின்றது.
வாகனங்கள் புகையினை வெளியேற்றும் போது தண்டங்களை விதிக்கும் பொலிஸார் ஏன் அரச வாகனங்களுக்கு அந்த நடைமுறைகளை பேணுவதில்லை என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அத்துடன் இவ்வாறு அதிகளவில் புகையை வெளிவிடும் வாகனங்களுக்கு எவ்வாறு புகைச்சான்றிதழ் வழங்க முடியும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், அரசாங்க வாகனங்களுக்கு ஒரு சட்டமும் பொதுமக்களது வாகனங்களுக்கு ஒரு சட்டமும் இலங்கையில் காணப்படுகின்றதா என அங்கிருந்த சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.