ஜனவரி முதல் பெப்ரவரி 15 வரையான காலப்பகுதியில், திறைசேரி உண்டியல்கள் மற்றும் திறைசேரி பத்திரங்கள் மூலம் அரசாங்கம் 1,033 பில்லியன் ரூபாவை கடனாகப் பெற்றுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார்.
உள்நாட்டில் பெற்ற கடன்களை செலுத்துவதற்கு கடன்களை பெற்றுக் கொள்வதன் மூலம் எதிர்காலத்தில் பிரச்சினைக்குரிய சூழ்நிலை உருவாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெளிநாட்டு கடனை செலுத்த தவறிய அரசாங்கம் உள்நாட்டு கடன் பொறியிலும் சிக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.