ஜனநாயகன் படத்தின் சென்சார் விவகாரம் தொடர்பான வழக்கு வாபஸ்!
நடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள், மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்திற்கு (CBFC) எதிரான ஒரு மாத கால வழக்கை மீளப் பெற்றுள்ளனர்.
இந்த வழக்கு சென்னை மேல் நீதிமன்றத்தில் இன்று (10) காலை 10.30 மணிக்கு நீதிபதி பிடி ஆஷா முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது இந்த முன்னேற்றம் நிகழ்ந்தது.
இதன் மூலம் படத்திற்கான சட்டத் தடைகள் நீங்கியுள்ளன.
இப்போது, படத்திற்கு U, U/A அல்லது A சான்றிதழ் வழங்குவது குறித்த திருத்தக் குழுவின் முடிவுக்காக தயாரிப்பாளர்கள் காத்திருக்கின்றனர்.
பெப்ரவரி 9 அன்று, திரைப்படத் தயாரிப்பாளர்கள் CBFCக்கு எதிரான ரிட் மனுவை மீளப் பெற மனு தாக்கல் செய்தனர்.

