நேற்றிரவு (15) முகத்துவாரம் பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் கத்திக்குத்துக்கு இலக்காகி உள்ளனர்.
குறித்த இருவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போதைப்பழக்கத்திற்கு அடிமையானவர் ஒருவரை விசாரணைக்கு உட்படுத்த முற்பட்ட போது குறித்த நபர் இவ்வாறு தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.