மொனராகலையில் 15 வயதான பாடசாலை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கர்ப்பமாக்கிய மூத்த சகோதரனை கைது செய்வதற்கான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுமி வயிற்று வலிக்காக வெல்லவாய ஆதார வைத்தியசாலைக்கு தாயுடன் சென்ற போது, அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.
சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போதே, 2019 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை மூத்த சகோதரரால் பலமுறை வன்புணரப்பட்டமை வெளிச்சத்துக்கு வந்தது.
இதன்படி, சிறுமியிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையின் போது, நள்ளிரவு 12 மணிக்குப் பிறகு, வீட்டில் உள்ளவர்கள் தூங்கச் சென்றதும், அவரது மூத்த சகோதரர் தன்னுடைய அறைக்கு வந்து, தொடர்ந்து பலமுறை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
மேலும், தனது தந்தை மற்றும் தம்பியும் தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுமி கூறியுள்ளார்.
கடைசியாக ஜனவரி 12 மற்றும் ஏப்ரல் 19 ஆகிய திகதிகளில் மூத்த சகோதரர் தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்தது தெரியவந்துள்ளது.
அச்சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் வெல்லவாய பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.