சகல மாவட்டங்களுக்கும் பெரும்போகச் செய்கைக்குத் தேவையான சேதனப் பசளையை பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பமாகும் என விவசாயத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஏ.எச்.எம்.எல்.அபயரத்ன தெரிவித்துள்ளார்.
திரவ உரம் மற்றும் நெனோ நைதரன் உரங்களும் இதன்போது இலவசமாக வழங்கப்படும்.
அம்பாறை மாவட்ட விவசாயிகளுக்கு சேதனப் பசளை விநியோகிக்கும் வேலைத்திட்டம் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டதாக விவசாயத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.