பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மருத்துவர் எலியந்த வைட் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் அவரின் இறுதிநிகழ்வுகள் நேற்று பொரளை கனத்தை மயானத்தில் இடம்பெற்றது.
இதன்போது அவரது குடும்பத்தவர்கள் உட்பட பலர் நிகழ்வில் கலந்துகொண்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
இதேவேளை நாட்டில் கொவிட் பரவல் காரணமாக இறுதிநிகழ்வுகளில் கலந்துகொள்வதற்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் செல்வாக்கு உடையவர்களிற்கு மட்டும் அந்த சட்டம் விதிவிலக்கா என பலரும் கேள்வி எழுப்பியுள்ளதுடன் விசனங்களையும் வெளியிட்டுள்ளனர்.