தன்னுடைய அம்மாவின் கணக்கை பயன்படுத்தி 2.45 லட்சம் ரூபாய் பெறுமதியான விளையாட்டு பொருட்களை வாங்கிய சுட்டி குழந்தையின் சம்பவம் பார்ப்பவர்களை வியப்படைய வைத்துள்ளது.
அம்மாக்களின் சமார்த்தியம்
பொதுவாக தற்போது இருக்கும் குழந்தைகள் குழப்பம் செய்தால் அவர்களுக்கு விளையாடுவதற்காக அம்மாக்கள் தங்களின் ஸ்மார்ட் போனை கொடுப்பார்கள்.
இவ்வாறு ஆரம்பத்தில் துவங்கி காலப்போக்கில் சாப்பாடு, தூக்கம், மகிழ்ச்சி, சிரிப்பு என இயற்கையாக பெறும் விடயங்களை செல்போனை கொடுத்து தான் பெற வேண்டும்.
அந்த வகையில் அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் பகுதியைச் சேர்ந்த ஜெசிகா என்ற சுட்டிகுழந்தை காரில் வெளியில் செல்லும் போது அதிகமாக குழப்பம் செய்துள்ளது.
இதனால் அவரின் தாயார் அவருடைய ஸ்மார்ட் போனை விளையாடுவதற்காக கொடுத்துள்ளார். அப்போது ஒன்லைன் வியாபாரத்தில் (அமேசான்) சுமார் 2.45 லட்சம் ரூபாய் பெறுமதியான விளையாட்டு பொருட்களை ஓடர் செய்துள்ளார்.
விழிபிதுங்கி நிற்கும் தாயார்
இதனை தொடர்ந்து அந்த பொருட்களுக்கு தன்னுடைய அம்மாவின் வங்கி கணக்கிலிருந்து பணத்தையும் செலுத்திருக்கிறார். இது குறித்து சுட்டி குழந்தையிடம் கேட்ட போது எனக்கு தேவைபட்டது வாங்கினேன் என பதிலளித்துள்ளார்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், இதனை பார்த்த இணையவாசிகள், “ விளையாட்டாக செய்த விடயம் வினையானது” என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.