சென்னைக்கும் , யாழ்ப்பாணம் சர்வதேச விமானநிலையத்திற்கு இண்டிகோ (Indigo) ஏயார்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய விமான சேவை ஆரம்பமாகியது.
அதன்படி தினந்தோறும் சென்னையிலிருந்து யாழ். பலாலிக்கு விமான சேவை நடத்தப்படவுள்ளதாக இண்டிகோ (Indigo) ஏயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது யாழ். பலாலிக்கு தினசரி விமான சேவையை இந்தியாவின் அலையன்ஸ் ஏயார் விமானம் (Alliance Air) நடத்துகிறது.
சென்னையில் இருந்து பயணத்தை ஆரம்பித்த விமானமானது 52 பயணிகளுடன் நேற்று பிற்பகல் 3.07 மணியளவில் பலாலியை வந்தடைந்த நிலையில் பயணிகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பலாலியில் இருந்து புறப்பட்ட விமானத்தில் 74 பயணிகள் பயணத்தை மேற்கொண்டனர்.
விமானத்தில் பயணித்த அனைத்து பயணிகளுக்கும் யாழ்ப்பாண உற்பத்திகளான பனம் பானம் உள்ளிட்ட யாழ்ப்பாண உற்பத்திகள் வழங்கப்பட்டன.
பலாலியில் இருந்து இண்டிகோ (Indigo) விமான சேவை ஆரம்பிக்கப்பட்டதால், கொழும்பிற்கு செல்லாமல் மிகவும் இலகுவான முறையில் பயணத்தை மேற்கொள்ள கூடியவாறு உள்ளதாக பயணிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்றைய ஆரம்ப நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், யாழ். இந்திய துணை தூதுவர் சாய் முரளி, விமானப்படை அதிகாரிகள், இந்திய துணைத் தூதரக அதிகாரிகள், பதவிநிலை அதிகாரிகள், பயணிகள் என பலர் கலந்து கொண்டனர்.