தேவையான பொருட்கள்
சிவப்பு அவல் – 1 கப்
வெல்லம் ஒரு – 1 கப்
தேங்காய் – 1 கப்
முந்திரி – 10
நெய் – 3 ஸ்பூன்
ஏலக்காய் தூள் – அரை ஸ்பூன்
செய்முறை
அடுப்பில் ஒரு பாத்திரை வைத்து அது சூடானதும் முதலில் சிவப்பு அவலை போட்டு நன்றாக 2 நிமிடம் வறுத்தெடுத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் சிறிதளவு நெய் ஊற்றி அதில் முந்திரை போட்டு பொன்னிறமாக வறுத்தெடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதில் துருவிய தேங்காயை போட்டு 2 நிமிடம் வதக்கி பொன்னிறமானதும் எடுத்துக் கொள்ளுங்கள்.
வறுத்தெடுத்த அவலை ஒரு மிக்ஸியில் போட்டு கொரகொரவென்று அரைத்தெடுத்துக் கொள்ளுங்கள். அரைத்த அவலில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் ஊறவிடுங்கள்.
பின்னர், வாணலில் வெல்லம் போட்டு அதில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்ச வேண்டும். இந்த பாகு கம்பி பதம் வந்தபிறகு நெய், தேங்காய் துருவல், அரைத்து ஊறவைத்த அவல், முந்திரி சேர்த்து மிதமான தீயில் 2 நிமிடம் வதக்க வேண்டும்.
பின்னர் அடுப்பை அணைத்து விட்டு 10 நிமிடம் கழித்து உருண்டை, உருண்டையாக அவல் லட்டு பிடிக்க வேண்டும்.
சூப்பரான, சுவையான அவல் லட்டு ரெடியாகிவிடும்.