சுவிஸில் இரண்டு ரயில்கள் தடம் புரண்ட சம்பவங்களில் பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விபத்து சம்பவம் சுவிஸில் வடமேற்குப் பகுதியில் இன்றைய தினம் (31-03-2023) இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து சம்பவத்தில், ஒரு ரயிலின் பின்புற பெட்டிகள் தடம் புரண்டதாகவும், மற்றைய ரயில் 40 கிலோமீட்டர் தொலைவில் தடம் புரண்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெர்ன் கன்டோனல் பொலிஸ் செய்தித் தொடர்பாளர் AFP இடம் இதனை உறுதி செய்துள்ளார்.
இந்த இரண்டு சம்பவங்களிலும், பலர் காயம் அடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டனர்.
முதல் சம்பவம் தலைநகர் பெர்னுக்கு வடமேற்கே 110 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லுஷெர்ஸில் நகரில் மாலை 4:30 மணியளவில் (1430 GMT) நடந்தது என்று பெர்ன் கன்டோனல் பொலிஸார் தெரிவித்தனர்.
லுஷெர்ஸ் மற்றும் பியென் இடையே ரயில் சென்று கொண்டிருந்த போது ஒரு ரயில் தடம் புரண்டது. ரயிலின் பின் பகுதி வலது பக்கத்தில் விழுந்ததாக பெர்ன் கன்டோனல் பொலிஸ் செய்தித் தொடர்பாளர் AFP இடம் கூறினார்.
இதில் பலர் காயமடைந்தனர். அவர்களின் நிலை குறித்த கூடுதல் விவரங்களை வெளியிடவில்லை. ரயில் தடம் புரண்டமைக்கான காரணமும் வெளியாகவில்லை.
பிராந்திய ரயில் இயக்குனர், ஆரே சீலண்ட் மொபில் கூறுகையில், தடம் புரண்டதால் இந்த பாதையில் சேவைகள் இரத்து செய்யப்பட்டதாக கூறியுள்ளார்.
இரண்டாவது சம்பவம் சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு Buren zum Hof இல் நடந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.