சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு ஆடம்பர மதுபான விடுதியின் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட வெடி விபத்தில் பலர் உயிரிழந்தனர்.
கிரான்ஸ்-மொன்டானாவின் ஸ்கை ரிசார்ட் நகரத்தில் அமைந்துள்ள மதுபான விடுதியில் நடந்த இந்த வெடிப்பில் பலர் காயமடைந்ததாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இறப்பு மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை.
இந்த சம்பவத்திற்கான சரியான காரணத்தை அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை.
சுவிட்சர்லாந்து அசாதாரண வறட்சியின் மத்தியில் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

