அதிகபட்ச மகிழ்ச்சியுடன் மக்கள் வார இறுதி விடுமுறையை கொண்டாட நுவலெலியாவில் குவிந்துள்ளனர்.
அதன்படி நுவரெலியா பிரதேசத்திற்கு அதிகளவான உள்ளூர் சுற்றுலா பயணிகள் வருகை தந்ததாக நுவரெலியா சுற்றுலா விடுதி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நாட்களில் நல்ல காலநிலையுடன் நுவரெலியா பிரதேசத்திற்கு அதிகளவான உள்நாட்டு உல்லாசப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதோடு, நுவரெலியா பிரதேசத்தில் உள்ள அனைத்து சுற்றுலா ஹோட்டல் அறைகளும் கிறிஸ்மஸ் விடுமுறைக்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளால் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்