வென்னப்புவ – பொரலஸ்ஸ பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றின் நீச்சல் தடாகத்தில் நீராடிக்கொண்டு இருந்த மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தி ஏற்படுத்தியுள்ளது.
பன்னல, மாகந்துர பிரதேசத்தில் இருந்து 80 மாணவர்கள் சுற்றுலா சென்றிருந்த போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் சந்தலங்காவ பிரதேசத்தில் வசிக்கும் 14 வயதுடைய 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவனே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த மாணவனின் சடலம் ஹலவத்தை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.