நட்சத்திர ஹோட்டலொன்றில், மியன்மார் நாட்டைச் சேர்ந்த 26 வயது யுவதியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சம்பவம் தொடர்பில், அ ஹோட்டலின் உரிமையாளர் மற்றும் இரு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த யுவதி நட்சத்திர ஹோட்டலுக்கு அருகிலுள்ள உணவு விடுதியொன்றுக்கு உணவு கொள்வனவு செய்வதற்காக தனது நண்பியுடன் சென்றுள்ளார்.
இதன்போது குளிர்பானத்தில் போதைவஸ்து கலந்து கொடுத்து அவரை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துஷ்பிரயோகத்திற்கு உள்ளான வெளிநாட்டு யுவதி தனது நண்பியுடன் ஏப்ரல் 30ஆம் திகதி இலங்கை வந்துள்ளார். வெசாக் போயா தினத்திற்கு முதல்நாள் அருகிலுள்ள உணவு விடுதியொன்றுக்கு உணவு எடுக்க சென்றபோது இருவரும் குளிர்பானம் அருந்தியுள்ளனர்.
அதன்பின்னர் மயக்கமடைந்த நிலையில் ஒரு யுவதி தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்று தன்னுடன் வந்த நண்பியை காணவில்லையென ஹோட்டல் முகாமையாளருக்கு தெரிவித்ததை அடுத்து முகாமையாளர் பெந்தொட்ட பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்துள்ளார்.
அதன் பின்னர் பொலிஸார், யுவதியை மீட்டு, பலப்பிட்டிய வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.