கடந்தமாதம் நாட்டுக்கு வந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அதன்படி ஜூன் மாதத்தில் 32865 சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர் இது முன்னைய மாதங்களை விட சற்று அதிகம்என இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அத்துடன் மேமாதத்தில் 30207 சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு விஜயம்மேற்கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து 6550 சுற்றுலாப்பயணிகளும் பிரிட்டனிலிருந்து 3199 சுற்றுலாப்பயணிகளும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் அவுஸ்திரேலிய இலங்கை கிரிக்கெட் தொடர்காரணமாக 2448 சுற்றுலாப்பயணிகள் இலங்கை வந்துள்ளனர்.
அதேவேளை கொரோனா பெருந்தொற்றின் பின்னர் மார்ச்மாதமே அதிகளவு சுற்றுலாப்பயணிகள் இலங்கைக் கு வந்துள்ளதாகவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.