சுனாமி பேபி என்ற அழைக்கப்படுகின்ற அபிலாஷ் தனது இல்லத்தில் வைத்துள்ள சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் தூபியில் இன்று அஞ்சலி செலுத்தினார்.
சுனாமி தாக்கத்தினால் கிழக்கு மாகாணமே மிகவும் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 2004.12.26 அன்று சுனாமியால் காணாமல்போய் பின்னர் கல்முனை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்ட அபிலாஷ் என்ற ஆண் குழந்தை ஒன்றுக்கு அப்போது 9 தாய்மார்கள் உரிமை கொண்டாடியிருந்தனர்.
பல்வேறு போராட்டங்களின் மத்தியில் இரண்டு தாய்மார்கள் உரிமை கோர குழந்தை மரபணு பரிசோதனை மூலம் ஜெயராசா தம்பதியினரது என உறுதிப்படுத்தப்பட்டு பின்னர் அக்குழந்தை அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அபிலாஷை அப்போதிருந்து சுனாமி பேபி என்றே அழைக்கப்பட்டுவரும் நிலையில் இன்றைய தினம் தனது 18வது வயதில் சுனாமி நினைவு தினத்தில் உயிர்நீர்த்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
அவ்வாறான அனர்த்தம் இனியொருபோதும் ஏற்படக்கூடாது என்பது தனது வேண்டுதலாக இருந்துவருவதாகவும் அவர் தெரித்தார்.
தற்போது செட்டிபாளையும் மகா வித்தியாலயத்தில் கலைப்பிரிவில் கல்வி பயிலும் அபிலாஷ் டீஎன்ஏ என்ற பரிசோதனையில்லாவிட்டால் தான் யாருக்கு பிள்ளையாக இருந்திருப்பேன் என்பதை சிந்திக்கமுடியாத நிலையுள்ளதாகவும் தெரிவித்தார்