ஏப்ரல் 6ம் தேதி முதல் மே 2ம் தேதி வரை சுக்கிர பகவான் ரிஷப ராசியில் சஞ்சரிக்க உள்ளார்.
ஜோதிடத்தில் ஒருவருக்கு திருமண சுகம், திருமண யோகம், ஆடம்பரம், வசதி, அன்பு, அழகு, செல்வங்களின் அதிபதியாக பார்க்கப்படுபவர் சுக்கிர பகவான், இவர் ரிஷபம், துலாம் ராசிக்கு அதிபதி.
இவர் ரிஷப ராசியில் அடுத்த ஒரு மாத காலம் ஆட்சி அதிபதியாக அமரப் போகிறார். இதனால் கடகம், கன்னி உள்ளிட்ட பல ராசியினர் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறப் போகிறார்கள்.
சுக்கிரன் ஆட்சி
சுக்கிரன் ஆட்சி பெறுவதால் சில ராசியினர் மட்டுமல்லாமல், உலக பொருளாதாரத்திலும் மேன்மை தரக்கூடிய நற்பலன்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.
மேஷம்
சுக்கிர பகவான் மேஷ ராசிக்கு தன ஸ்தானத்தில் ஆட்சி பெற உள்ளார். இதனால் உங்களின் குடும்ப நிலை மற்றும் நிதி நிலை சிறப்பாக மேம்படும். உங்கள் தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும், புதிய வாய்ப்புகளையும் எதிர்பார்க்கலாம்.
ஏப்ரல் மாதத்தில் நிங்கள் எந்த ஒரு கடினமான முடிவையும் மிக எளிதாக எடுப்பீர்கள். வேலை, வியாபாரம் தொடர்பாக நீங்கள் மேற்கொள்ளும் பயணம் நல்ல அனுகூலம் தரும். உங்களின் வருமானம் உயர்த்துவதற்கான செயல்கள் நல்ல வெற்றியைத் தரும்.
குடும்பத்தில் வாழ்க்கைத் துணையுடன் நல்லுறவு ஏற்படும். குடும்பத்துடன் இன்ப சுற்றுலா செல்லுதல் என மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள்.
ரிஷபம்
சுக்கிரன் உங்கள் ராசியிலேயே ஆட்சி, அதிபதியாக சஞ்சரிக்க உள்ளார். இந்த காலத்தில் உங்களின் வேலை, தொழில் சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகளைப் பெறலாம். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும்.
உங்களுக்கு வர வேண்டிய பணம் திரும்ப கிடைக்க வாய்ப்புள்ளது. உங்களின் மனச் சுமை இறங்கும். உங்களின் செயல்களுக்கு பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். அடுத்த ஒரு மாத காலத்தில் உங்களுக்கு வேலையில் சற்று பளு இருக்கும்.
அதனால் ஆரோக்கியத்திலும் அக்கறை செலுத்துவது அவசியம். இந்த பெயர்ச்சி காலத்தில் அதிர்ஷ்டம் உங்களுக்கு ஆதரவாக இருக்கும் என்பதால் உங்கள் வேலை, வியாபாரத்தில் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம்.
அதனால் சேமிப்பும் மேம்படுத்த முடியும். திருமண வாழ்க்கையில் மிக இனிமையாக இருக்கும். உங்கள் உறவு மேம்படும்.
கடகம்
கடக ராசிக்கு 11ம் வீடான லாப ஸ்தானத்தில் சுக்கிரன் ஆட்சி பெற்றிருப்பதால் உங்களுக்கு பலவிதத்திலும் சாதகமானதாக அமையும். இந்த நேரத்தில் உங்களின் பொருளாதார நிலை உயரும்.
பொருளாதார ஆதாயமும் கிடைக்கும். ஆன்மிக செயல்பாடு அதிகரிக்கும். நீண்ட நாட்களாக வேலை தேடுவோருக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை, வியாபாரத்தில் உங்களின் செயல்பாடு சிறப்பாக இருக்கும்.
பணியிடத்தில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். வெளிநாடு தொடர்பான விஷயங்கள் மன திருப்தியைத் தரும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். சொந்த தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசிக்கு 9ம் வீடான பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன் ஆட்சி செய்ய உள்ளார். இந்த காலத்தில் உங்கள் குடும்ப உறுப்பினர்களுடனான உறவு மேம்படும். உங்கள் வேலை, தொழில், படிப்பு என அனைத்து விஷயத்திலும் இருக்கும் போட்டி சார்ந்த விஷயங்களில் நல்ல வெற்றியைப் பெற்றிட முடியும்.
உத்தியோகஸ்தர்களின் சிறப்பான செயல்பாடு காரணமாக உங்கள் பணியிடத்தில் மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். பதவி உயர்வுக்கு சாத்தியம் உண்டு. உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பும் சிறப்பாக இருக்கும்.
காதல் வாழ்க்கையில் நெருக்கம் அதிகரிக்கும். தவறான புரிதல் நீங்கும். புதிய வீடு, வாகனம் வாங்க வாய்ப்புகள் உள்ளன.
மகரம்
மகர ராசிக்கு சுக்கிரனின் ஆட்சி பெற்ற நிலை காரணமாக உங்களுக்கு சுப பலன்கள் சிறப்பாக கிடைக்கும். உத்தியோகம், தொழிலில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். பதவி உயர்வும் சாத்தியமுண்டு.
அரசு வேலைக்குத் தயாராகும் இளைஞர்களுக்கு இந்த காலகட்டத்தில் வெற்றியைப் பெற வாய்ப்புள்ளது. காதல் தொடர்பான விஷயங்களில் வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.
வெளிநாட்டில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உங்களின் செல்வாக்கும் அதிகரிக்கும். கும்ப ராசி, சுகத்தை வாரி வழங்கக்கூடிய சுக்கிர பகவான், சுக ஸ்தானத்தில் ஆட்சி பெறுவதால் உங்களுக்கு சற்று ஓய்வு கிடைக்கும்.
சூழல்கள் சாதகமாக அமையும். வேலை, கல்வி தொடர்பாக வெளிநாடு செல்ல திட்டமிடுபவர்களுக்குச் சாதகமான நேரமாக இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த சச்சரவுகள், மனஸ்தாபங்கள் நீங்கி உங்களின் உறவு வலுப்பெறும். குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டு மகிழ்ச்சி அடைவீர்கள்.