வைத்தியர்களுக்கு வழங்கப்படும் DAT கொடுப்பனவை தங்களுக்கும் வழங்குமாறு கோரி பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள சுகாதார தொழிற்சங்கங்கள் சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரனவுடன் கலந்துரையாட உள்ளதாக தெரிவிக்கின்றன.
இக் கலந்துரையாடல் இன்று (2024.02.19) காலை 10 மணியளவில் இடம்பெறவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அதேவேளை, இன்று நடைபெறும் கலந்துரையாடலில் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிடின் மீண்டும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.