நாடு முழுவதும் கடந்த வெள்ளிக்கிழமை முதல் மதுபானக் கடைகளைத் திறப்பதற்கு எடுக்கப்பட்ட முடிவை, புகையிலை மற்றும் மது மீதான தேசிய அதிகாரசபை கண்டித்துள்ளது. அந்த நிறுவனத்தின் தலைவர் சமாதி ராஜபக்க்ஷ.
இந்த தொற்றுநோய் காலத்தில் மது அருந்துவதையும் புகைப்பிடிப்பதையும் தவிர்க்குமாறு சுகாதார அதிகாரிகள் பலமுறை மக்களுக்கு அறிவுறுத்தும்போது, மதுக்கடைகள் அருகே மக்கள் கூடி வருவது மிகவும் பரிதாபகரமானது என்றார். “இது வருத்தமாக இருக்கிறது. மதுவுக்கு எதிரான இயக்கத்தை வழிநடத்தின அனாகரிக தர்மபாலாவின் பிறந்தநாளான செப்டம்பர் 17 அன்று மாலை 4.00 மணியளவில் நாடு முழுவதும் உள்ள மதுபானக் கடைகள் மற்றும் விற்பனை நிலைய உரிமையாளர்களை தங்கள் கடைகளைத் திறக்குமாறு சில அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டது“ என்றார்.
“அனுராதபுரத்திற்கு நான் செல்லும் போது, எந்தவொரு சுகாதார விதிமுறைகளையும் கடைபிடிக்காமல் ஏராளமான மக்கள் மதுபானக் கடைகளுக்கு விரைந்து செல்வதையும், மதுபானங்களை வாங்க எந்த சுகாதார வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்காமல் நீண்ட வரிசையில் நிற்பதையும் கவனித்தேன்,” என்று அவர் கூறினார்.