சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
அதன்படி, இராஜாங்கனை, தப்போவ நீர்த்தேக்க, மஹவிலச்சிய தெதுறுஓயா யோதவாவி உள்ளிட்ட நீரத்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
அதேநேரம், நுவரெலியா மாவட்டத்தில் மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான்கதவும் கெனியோன் மற்றும் லக்ஷபான நீரத்தேக்கங்களின் வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.
மேலும் நோட்டன் பிரிஜ் பிரதேசத்தில் விமல சுரேந்திர நீரத்தேக்கத்தின் வான் பாய்வதால், நீர்த்தேக்கத்தின் தாழ்நிலப்பகுதிகளில் வாழும் மக்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.