அநுராதபுரம் – ஹிகுரங்கொட மின்னேரிய பிரதேசத்தில் வீடொன்று இடிந்து வீழ்ந்ததில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நிலவும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்தமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ஹிகுரங்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் 23 வயதான ஒரு பிள்ளையின் தாய் உயிரிழந்துள்ளதுடன், அவரது கணவர் மற்றும் ஒன்றரை வயது குழந்தையும் விபத்தில் காயமடைந்து பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, பதுளை மாவட்டத்தில் நிலவும் மழையுடன் மண்சரிவு அபாயம் அதிகரித்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையுடன், அடையாளம் காணப்பட்ட மண்சரிவுகளுக்கு மேலதிகமாக பல பகுதிகளில் மண்சரிவுக்கான அறிகுறிகள் தென்படுவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பதுளை மாவட்ட இணைப்பாளர் ஈ.எம்.எல்.உதயகுமார தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு ஈ.எம்.எல்.உதயகுமார எச்சரிக்கை விடுத்துள்ளார்.