சீரற்ற காலநிலையால் தப்போவ நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள் இன்று காலை திறக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக நீர்த்தேக்கங்களை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், தெதுரு ஓயா, ராஜாங்கனை நீர்த்தேக்கம், அங்கமுவ மற்றும் கலாவெவ ஆகியவற்றின் வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

