நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையால் இரு வெவ்வேறு பகுதிகளில் நீரில் மூழ்கிய இருவரை காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்னேரிய குளத்திலிருந்து கந்தளே ஏரிக்கு நீர் செல்லும் கால்வாயில் நீராடச் சென்ற நபர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு காணாமல்போனவர் 37 வயதான அவர் அத்துரலிய, யஹலமுல்ல பிரதேசத்தில் வசிப்பவராவார். பொலிஸார் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து காணாமல் போனவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, வக்கமுல்ல, வீரகெடிய, ஊருபோகுஓயே அணையின் மீது நடந்து சென்ற 40 வயதுடைய நபர் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
இவர் வக்கமுல்ல, ஹகுருவெல பிரதேசத்தில் வசிப்பவர் என கூறப்படும் நிலையில், காணாமல் போன இருவரையும் தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன