இறக்குமதி செய்யப்படும் சீமெந்துக்கு விதிக்கப்பட்டுள்ள செஸ் வரியை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 17ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த வரி திருத்தப்பட்டுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி ஒரு கிலோ கிராம் செயற்கை நிறம் கொண்ட அல்லது நிறமற்ற வெள்ளை சீமெந்து ஒரு கிலோ கிராமிற்கு விதிக்கப்பட்டிருந்த 3 ரூபாய் செஸ் வாி 5 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
50 கிலோ கிராம் மற்றும் அதற்கும் குறைவான பொதிகளில் இறக்குமதி செய்யப்படும் ஏனைய போர்ட்லேண்ட் சீமெந்து ஒரு கிலோ கிராமிற்கு விதிக்கப்படும் 5 ரூபாய் செஸ் வாி 8 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேநேரம் 50 கிலோ கிராம் மற்றும் அதற்கு மேற்பட்ட பொதிகளில் மொத்தமாக இறக்குமதி செய்யப்படும் ஏனைய போர்ட்லேண்ட் சீமெந்து ஒரு கிலோ கிராமிற்காக அறவிடப்படும் 3 ரூபாய் வாி 5 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.