சந்தையில் சீமெந்து தட்டுப்பாடு மேலும் இரண்டு மாதங்களுக்கு காணப்படும் என சீமெந்து இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் சீமெந்து விலையை அதிகரிக்க எதிர்ப்பார்ப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்தும் கருந்து தெரிவித்த அவர்கள்,
“இரண்டு நாட்களில் இதனை நிறுத்த முடியாது. எப்படியும் 2 மாதங்களாவது செல்லும். சீமெந்து தட்டுப்பாட்டிற்கு காரணம் டொலர் பிரச்சினையாகும். இதனால் சிறு விலை அதிகரிப்பு ஏற்படக்கூடும்.”
சமீபத்தில் சீமெந்து மூடை ஒன்றின் விலை 93 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட நிலையில் தற்போது ஒரு மூடை சீமெந்து 1,098 ரூபாவுக்கு சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.
எவ்வாறாயினும், உரிய வகையில் சீமெந்து கிடைப்பதில்லை எனவும், அவ்வாறு கிடைக்கும் சீமெந்து பல்வேறு விலைகளின் கீழ் கிடைப்பதாகவும் விற்பனையாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
“ஒரு தடவைக்கு 100 சீமெந்து மூடைகள் தான் கிடைக்கின்றன. 10 நிமிடங்களில் அவை முடிந்து விடுகின்றன.”
இதன் காரணமாக கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ள தரப்பினர், சீமெந்து கல், பூந்தொட்டி மற்றும் பூங்கா அலங்கார பொருட்கள் உற்பத்தியாளர்கள் வருமான வழித்தடங்கள் தடைப்பட்டுள்ளதால் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், சீமெந்து இறக்குமதியாளர்கள் நேற்று (27) பிற்பகல் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்னவை சந்தித்து கலந்துரையாடி இருந்தனர்.
பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர்,
´´எதிர்வரும் மூன்று வாரங்களுக்குள் சந்தைக்கு சீமெந்தை பெற்றுக் கொடுக்க இறக்குமதியாளர்கள் மற்றும் உற்பத்தி நிறுவனஙக்ள் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர்”. என்றார்.