சில சீன கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்களை கொள்வனவு செய்வதை இடைநிறுத்துவதற்கு அமெரிக்கா தயாராகி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
அமெரிக்க ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கொமிஷன் இந்த முடிவை எடுக்க உள்ளது.
அதன்படி, Huawei, ZTE, Hytera Communications Corp, Hangzhou Hikvision Digital Technology Co மற்றும் Zhejiang Dahua Technology Co ஆகியவற்றிலிருந்து கையடக்க தொலைப்பேசிகளை மற்றும் தொழில்நுட்ப உபகரணங்களின் விற்பனையை தடை செய்ய அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
அந்தந்த நிறுவனங்களின் தயாரிப்புகள் தொடர்பாக அமெரிக்கா விசேட ஆய்வொன்றை நடத்தியதாகவும், அந்த ஆய்வின் பரிந்துரைகளின் அடிப்படையில் உரிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜோர்ஜ் வொஷிங்டன் பல்கலைக்கழகத்தினால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.
2015 முதல் 2021 வரை அமெரிக்காவால் வாங்கப்பட்ட அந்தந்த நிறுவனங்களின் 1,681 தயாரிப்புகள் தொடர்பாக இந்த சிறப்பு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.