அபாயகரமான பக்டீரியா அடங்கிய சீன சேதன உரக் கப்பலை இலங்கைக்குள் வர விடமாட்டோம் என கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன், குறித்த சேதன உர மாதிரியை மீளாய்வு செய்யவோ, அதற்கான கொடுப்பனவை வழங்கவோ போவதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த உரத் தொகையை எடுத்து சென்று எமது தேவைக்கு ஏற்றவாறான உரத்தை எடுத்து வந்தால் கொடுப்பனவு செலுத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.