தங்காலை சீனிமோதர பகுதியில் மூன்று லொறிகளில் இருந்து கைப்பற்றப்பட்ட பாரிய அளவிலான போதைப்பொருள் தொகையுடன் தொடர்புடைய மற்றொரு நபர் தங்காலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
‘பெலியட்டா சனா’ என்று அழைக்கப்படும் சந்தேக நபர் நேற்று (01) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அண்மையில், சீனிமோதரவில் மூன்று லொறிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 700 கிலோ கிராம் ஹெராயின் மற்றும் ஐஸ் போன்ற போதைப்பொருட்களை பொலிஸார் பறிமுதல் செய்தனர்.
இந்த போதைப்பொருள் சரக்கு வெளிநாட்டைச் சேர்ந்த ‘உனகுருவ சாந்த’ என்ற கடத்தல்காரருக்கு சொந்தமானது என்று நம்பப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக, இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
அதன்படி, சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபரின் நெருங்கிய சகா என்று கூறப்படும் ‘பெலியட்டா சனா’ கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், போதைப்பொருள் பதுக்கி வைக்க கடத்தல்காரர்கள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் மற்றொரு வீட்டை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
தங்காலை – மாரகொல்லிய பகுதியில் அமைந்துள்ளஇந்த வீடு போதைப்பொருட்களை மறைத்து வைக்க பயன்படுத்தப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.