இரத்தினபுரி – பெல்மடுல்ல பிரதேசத்தில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய மாணிக்கக் கல் உட்பட மேலும் சில மாணிக்கக் கற்கள் சீனாவுக்கு விரைவில் கொண்டுசெல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இத்தகவலை மாணிக்கக் கல் தொழிற்துறை சார்ந்த இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.
விசேட விமானம் ஊடாக அவை சீனாவுக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு நடைபெறவுள்ள ஏலத்தில் விற்பனைக்கு விடப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்