சீனாவின் ஷங்ஹாய் நகரைச் சேர்ந்த 150 சுற்றுலாப் பயணிகளுடன் ஒரு விமானம் வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப் பயணிகள் நேற்று மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருவார்கள் என சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
சீன அரசாங்கம் கொவிட் கொள்கையை தளர்த்தி அந்நாட்டு மக்களை வரையறுக்கப்பட்ட சில நாடுகளுக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்கியுள்ளது.
அந்த நாடுகளில் இலங்கையும் உள்ளீர்க்கப்பட்டுள்ளது.