இலங்கைக்கு இன்று வருகைதரும் என கூறப்பட்டிருந்த சீன கப்பல் ஹம்பாந்தோட்டையில் இருந்து 600 கடல் மைல் தொலைவில் திடீரென வேகத்தைக் குறைத்து, திசை திருப்பியமையை காண முடிந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இலங்கை நோக்கி பயணிக்கும் சீனாவின் அதி தொழில்நுட்ப ஆய்வுக் கப்பலான யுவான் வாங்-5 தொடர்பில் பதிலளிப்பதை தவிர்த்துக்கொள்வதாக தெரியவந்துள்ளது.
இலங்கைக்கு பயணிக்கும் கப்பலை தாமதப்படுத்துமாறு இலங்கை வௌிவிவகார அமைச்சு சீன தூதரகத்திடம் கோரிக்கை விடுத்திருந்த போதிலும் அதற்கு எவ்வித காரணங்களையும் கூறியிருக்கவில்லை.
எனினும் குறித்தக் கப்பல் இன்றைய தினத்தில் அம்பாந்தோட்டையை வந்தடையும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஹம்பாந்தோட்டையில் இருந்து 600 கடல் மைல் தொலைவில் திடீரென இந்த கப்பல் வேகத்தைக் குறைத்து, திசை திருப்பியமையை காண முடிந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் சீன உளவுக் கப்பல் இலங்கைக்கு வருவதை தாமதப்படுத்தலாம் என்றும் அந்த தகவல்கள் கூறுகின்றன.