கடந்த பௌர்ணமி தினத்துடன் சிவனொளிபாத மலை பருவ காலம் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நல்லதண்ணி பகுதியில் உள்ள சிவனொளிபாத மலை அடிவாரத்தில் உள்ள ஜப்பான் நாட்டின் பௌத்தர்கள் இலங்கையில் சமாதானம் நிலவ கட்டப்பட்ட சாம சயித்தியவில் உள்ள ஜப்பான் நாட்டு பிக்கு ஒருவர் கடந்த 10 ஆண்டுகளாக 3000 தடவைகள் சிவனொளிபாத மலை உச்சிக்கு சென்று அங்கு உள்ள சமன் தெய்வத்தை தரிசனம் செய்துள்ளதாக நேற்று முன்தினம் மாலை உச்சிக்கு சென்று தரிசனம் செய்து திரும்பும் போது தெரிவித்துள்ளார்