தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரனை எதிர்வரும் 18ஆம் திகதி காலை 9.30 மணிக்கு கொழும்பில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் பொலிஸார் ஊடாக குறித்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவரான வி.எஸ்.சிவகரன் கொழும்பில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகும் போது அன்றைய தினம் குறித்த அமைப்பு சம்பந்தமான அனைத்து ஆவணங்களையும் எடுத்து வருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது