சில பாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகள் மிகவும் வருந்தத்தக்கதாக இருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
கருத்துக்களை தெரிவிக்கும் சுதந்திரம் இருக்கின்ற காரணத்தால் அதனை தவறாக பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கண்டியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.