சிற்றூர்தியொன்று மோதி மூன்று பெண்கள் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இச் சம்பவம் நாரம்மல பெந்திகமுவ சந்தியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம்
நாரம்மலையில் இருந்து குருநாகல் நோக்கி பயணித்த சிற்றூர்தியின் சாரதி கட்டுப்பாட்டை இழந்து பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த பெண்கள் மூவரை மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவத்தில் பலத்த காயமடைந்த இருவர் நாரம்மல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதுடன் மற்றைய பெண் மேலதிக சிகிச்சைகளுக்காக குருணாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
நாரம்மல பெந்திகமுவ பகுதியைச் சேர்ந்த 56, 59 மற்றும் 61 வயதுடைய பெண்களே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.