சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் உடமைகள் அனைத்தும் நாடாளுமன்ற உறுப்பினருக்கான உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து நீக்கப்படவுள்ளன.
வீடு ஒன்று கிடைக்கும் வரை ரஞ்சனின் உடமைகளை அவருக்கு வழங்கப்பட்ட வீட்டில் வைப்பதற்கு அனுமதி வழங்குமாறு அவரது சட்டத்தரணி, அமைச்சர் லொஹான் ரத்வத்தேயிடம் இதற்கு முன்னர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதற்கமைய அமைச்சர் லொஹான் ரத்வத்தே, சபாநாயகர் மஹிந்த யாப்பாவுடன் கலந்துரையாடல் மேற்கொண்டு 3 மாதங்களுக்கு அங்கு உடமைகளை வைக்க அனுமதி வழங்க நடவடிக்கை மேற்கொண்டிருந்தார்.
குறித்த 3 மாத காலப்பகுதி கடந்த 20ஆம் திகதியுடன் நிறைவுக்கு வந்துள்ளதாக நாடாளுமன்ற தகவல் வட்டாரங்கள் தெரிவித்தள்ளது.
எனினும் இந்த விடயம் தொடர்பில் சபாநாயகருடன் எதிர்வரும் நாட்களில் கலந்துரையாடல் மேற்கொண்டு தீர்மானம் ஒன்று எடுக்கப்படவுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
புதிய உறுப்பினர்களுக்கு வீடு வழங்குவதில் பிரச்சினைகள் உள்ளமையினால், ரஞ்சனுக்கு வழங்கப்பட்ட வீட்டை மீள பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.