கிழக்கு மத்திய ஆப்பிரிக்க நாடான புருண்டியில், சிறைச் சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 38 கைதிகள் உயிரிழந்தனா்.
இதுகுறித்து அந்த நாட்டு துணை அதிபா் ப்ராஸ்பா் பஸூம்பன்ஸா கூறியதாவது:
கிடேகா நகரிலுள்ள சிறைச் சாலையில் செவ்வாய்க்கிழமை காலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி 38 கைதிகள் உயிரிழந்தனா். 60 க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்தனா் என்றாா் அவா்.
400 போ் மட்டுமே தங்கக் கூடிய கிடேகா சிறையில், அளவுக்கு அதிகமாக 1,500 க்கும் மேற்பட்ட கைதிகள் அடைத்துவைக்கப்பட்டிருந்ததால் இந்த தீவிபத்தில் இத்தனை அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக புருண்டி ஊடகங்கள் குற்றம் சாட்டியுள்ளன.