பல்லேகலையில் சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்ற கைதி ஒருவர் கம்பஹா, இஹலகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்லேகலை – குண்டசாலை திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்தே இவர் தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபரின் சந்தேகத்திற்கிடமான நடத்தையை அவதானித்த கம்பஹா குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் அவரைக் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணையில் அவர் சிறையில் இருந்து தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது.
குறித்த நபர் நாட்டில் பதிவு செய்யப்பட்ட குற்றவாளி எனவும் கம்பஹா பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலும் இவர் கொள்ளையடித்துள்ளதாகவும் பின்னர் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சந்தேக நபர் கம்பஹா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.