களுத்துறை சிறைச்சாலைக்கு கால்சட்டையில் நூதனமாக ஹெரோயின் போதைப்பொருளை மறைத்து எடுத்து சென்ற கர்ப்பிணிப் பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபரான கர்ப்பிணி , சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது சட்டபூர்வமற்ற கணவரிடம் ஒப்படைப்பதற்காக போதை பொருளை எடுத்துசென்றதாக பொலிசார் கூறியுள்ளனர்.
கைதான பெண் அவிசாவளை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் என்பதுடன் இரண்டு பிள்ளைகளின் தாயுமாவார் என பொலிஸார் கூறியுள்ளனர்.
போதைப்பொருள் குற்றச்சாட்டில் களுத்துறை மல்வத்தை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது சட்டபூர்வமற்ற கணவரைச் சந்திக்க , குறித்த கர்ப்பிணி பெண் வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகத்தின் பேரில் சிறைக்காவலர்கள் மேற்கொண்ட சோதனையின் போது, மறைத்து வைக்கப்பட்டிருந்த 990 மில்லிகிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது குறித்த பெண்ணுடன் அவரது 6 மற்றும் 4 வயதுடைய இரண்டு மகன்களும் சென்றுள்ளனர். இந்நிலையில் கைதான பெண் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் மேலும் கூறியுள்ளனர்.