பாம்புகளின் வசிப்பிடமாக மாறியுள்ள ஓட்டமாவடி சிறுவர் பூங்கா,டெங்கு பரவும் இடமாகவும் மாறியுள்ளதால் புனர்நிர்மாணம் செய்யுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
குறித்த சிறுவர் பூங்கா பல வருடங்களாக கவனிப்பாரற்ற நிலையில் காணப்படுகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.மேலும் அதனைச் சுற்றியுள்ள சூழலும் புற்கள் முளைத்து காடுகளாக காட்சியளிக்கிறது.
ஆகையால் கவனிப்பாரற்ற நிலையில் காணப்படும் சிறுவர் பூங்காவை பிரதேச சபை நிர்வாகம் கவனம் செலுத்தி, முறையாக பராமரித்து சிறுவர்கள் பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.