தற்போது அதிகரித்து வரும் வெப்பமான காலநிலையினால் சிறுவர்கள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு பெற்றோர்களுக்கு அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளது.
பெற்றோர்கள் தமது குழந்தைகளை குறைந்தைகளை குறைந்தது 20 நிமிடங்களாவது நீராடச்செய்வது அவசியமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதிகரித்து வரும் வெப்பநிலையினால் சிறுவர்கள் மத்தியில் தோல் நோய்கள் அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் உடலில் நீரிழப்புக்கான சாத்தியமும் அதிகமாகக் காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறுவர்களுக்கு எளிய ஆடைகள் இயற்கை பானங்களை வழங்குதல் ஆகியவற்றை கடைப்பிடிக்குமாறும் கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.